செய்துங்கநல்லூர் சேவியர் பாலிடெக்னிக் கல்லூரி சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.
கல்லூரி முதல்வர் ஆவுடையப்பன் தலைமை வகித்தார். துணை முதல்வர் அன்சலாம் ரோசர் முன்னிலை வகித்தார். தூத்துக்குடி சுகாதார மாவட்ட துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் டாக்டர் கீதா ராணிமேற்பார்வையில் மாவட்ட தொற்றா நோய் திட்ட அலுவலர் டாக்டர் அருண்குமார் முகாமை துவக்கி வைத்தார். திருநெல்வேலி அரசு மருத்துவமனை டாக்டர் கமலா நேரு தலைமையில் கருங்குளம் அரசு மருத்துவமனை டாக்டர் முகமது கனி உள்பட பல மருத்துவர்கள் முகாமில் கலந்து கொண்டு, மாணவர்களிடம் ரத்தம் சேகரித்தனர். நூற்றுக்கணக்கான மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.
முகாமில் உதவி திட்ட மேலாளர் டாக்டர் கன்னியம்மாள், தூத்துக்குடி மாவட்ட துணை இயக்குநரின் நேர்முக உதவியாளர் பாலசுப்பிரமணியன், வட்டார சுகாதார ஆய்வாளர் பெரியசாமி, சுகாதார ஆய்வாளர்கள் சீனிவாசன், சண்முகபெருமாள், பகுதிநேர சுகாதார செவிலியர் ராஜலெட்சுமி, கிராம சுகாதார செவிலியர் விவேகானந்த விஜயா, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆறுமுகசேகர், விளையாட்டு துறை ஆசிரியர் ராகுல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் டாக்டர் ஸ்டிபன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.


