தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் ஸ்ரீமூலக்கரை ஊராட்சி அடைக்கலாபுரத்தில் ரூ.14.50 லட்சம் நிதியில் கட்டி முடிக்கப்பட்ட குடிநீர் அபிவிருத்தி திட்டத்தை கழக அமைப்பு செயலாளரும்,ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ திறந்து வைத்தார்.
ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் ஸ்ரீமூலக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட அடைக்கலாபுரம் சேசுகோவில் பகுதியில் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 14.50 லட்சம் செலவில் பேட்மாநகரம் பரம்பில் ஆழ்துளை குழாய் அமைத்து மின்மோட்டார் அறை கட்டி பம்பிங் லைன் விரிவாக்கம் செய்து குடிநீர் வழங்கும் பணியினை கழக அமைப்பு செயலாளரும்,ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
திருப்பாற்கடல் முன்னாள் ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் ஆறுமுகநயினார் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் வெங்கடாச்சலம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) பானு உதவி பொறியாளர்கள் தளவாய் ஜெயபால் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை இணை செயலாளர் காசிராஜன் ஊர் பிரமுகர் தங்கபாண்டி மற்றும் பாலஜெயம் சாம்ராஜ் பேச்சிமுத்து உட்பட பலர் கலந்துகொண்டனர்.