
வல்லநாடு பாரதி மழலையர் துவக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. அரியகுளம் சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சுந்தரலட்சுமி தலைமை வகித்தார். பள்ளி நிறுவனர் பாரதி சங்கரலிங்கம் வரவேற்றார். பாளையங்கோட்டை மத்திய சிறைக் கண்காணிப்பாளர் செந்தாமரைக் கண்ணன் சிறப்புரையாற்றினார். மாணவ மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. பள்ளி முன்னாள் மாணவர் செந்தில்குமார், பாளையங்கோட்டை கே.டி.சி நகர் மெயில் பார் பிரைன் சொசைட்டி இயக்குனர் ராஜலட்சுமி, முறப்பநாடு காவல் ஆய்வாளர் விஜயகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். நெல்லை மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளர் இசக்கி முத்தையா தொகுத்து வழங்கினார். பள்ளி நிர்வாகக்குழு செயலர் மீனா சங்கர் நன்றி கூறினார்.