வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் கோயிலில் 37ஆம் ஆண்டு குருபூஜை விழாவையொட்டி 1008 தீபம் ஏற்றும் நிகழ்ச்சி வருகிற 20ந் தேதி நடைபெறவுள்ளது.
வல்லநாடு சித்தர் சாது சிதம்பர சுவாமிகள் கோயிலில் நடைபெறும் இவ்விழாயையொட்டி 20 ந்தேதி காலை 9 மணிக்கு அகவல் பாராயணம், பகல் 12 மணிக்கு குருபூஜை வழிபாடு, 1 மணிக்கு அன்னதானம் நடைபெறும். பிற்பகல் 2 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவு நடைபெறும். அறங்காவலர் பழநி கடவுள் வாழ்த்து பாடுகிறார். அறக்கட்டளை தலைவர் சுப்பையா தலைமை வகிக்கிறார். அறங்காவலர் சங்கரபாண்டியன் முன்னிலை வகிக்கிறார். துரை அரசன் வரவேற்கிறார். செயலாளர் சிவானந்தம், சிவகங்கை பிச்சையா, சிதம்பர பாண்டியன், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரிகள் ராஜேந்திரன், மாசனமுத்து உள்பட பலர் பேசுகிறார்கள். அறங்காவலர் குபேரன் நன்றி கூறுகிறார்.
மாலை 6.30 மணிக்கு அருள்ஜோதி ஆனந்த சபையில் 1008 தீப ஜோதி வழிபாடு தொடர்ந்து திரு.அருட்பா, தேவாரம், திருவாசகம், திருபல்லாண்டு பாடப்பெற்ற ஜோதி வழிபாடு, மகா தீபாரதனை நடைபெறும். 7 மணிக்கு மழையூர் சதாசிவம் அவர்களின் அருட்பா இன்னிசை கச்சேரி நடைபெறும். இரவு 8 மணிக்கு மங்கள பூஜை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை வல்லநாடு சாது சிதம்பர சுவாமிகள் அறக்கட்டளை மற்றம் தொண்டர்குலத்தார் செய்து வருகின்றனர்.