
சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை காணிக்கை மாதா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை காணிக்கை மாதா திருவிழா ஜன. 24-ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து இவ்விழா பிப். 2ஆம்தேதி வரை 10நாள்கள் நடக்கிறகு. முதல் நாள் கூடுதாழை பங்குத்தந்தை ஜெகதீஸ் தலைமை வகித்து திருவிழா கொடியேற்றினார். வீரபாண்டியன் பட்டணம் பங்குத்தந்தைஆன்ட்ரூடிரோஸ் மறையுரை வழங்கினார் இந்நிகழ்வில் செட்டிவிளை பங்குத் தந்தை பீற்றர்பால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பிப்ரவரி 1ம் தேதி மாலை பெருவிழா மாலை ஆராதைனையும், 2ம் தேதி காலை பெருவிழா புது நன்மை திருப்பலியும் மாலையில் நற்கருணைப் பவனியும் நடக்கிறது.
திருவிழா ஏற்படுகளை பங்குப் பணியாளர்கள்செல்வன் பர்னாந்து, பவுன் பாஸ், அருட்சகோதரிகள் ஊர் நலக் கமிட்டியினர் மற்றும் இறைமக்கள் செய்து வருகின்றனர்.