சாத்தான்குளம் அரசு நூலகத்தில் புத்தக தினவிழாவை முன்னிட்டு நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் புனித வளன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் முதலிலிடம் பெற்றுள்ளனர்.
சாத்தான்குளம் ராம.கோபாலகிருஷ்ணபிள்ளை அரசு பொது நூலத்தில் ஏப். 23ஆம் தேதி உலக புத்தக தின விழா நடைபெறுகிறது.
இதையொட்டி, “என்னை செதுக்கிய நூல்கள்’ என்ற தலைப்பில் வட்டார அளவிலான பள்ளி மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி அந்தந்தப் பள்ளிகளில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாணவர்களின் கட்டுரைகள் நூலகத்தில் வாசகர் வட்ட துணைத் தலைவர் கனகராஜ் தலைமையிலான குழுவினர் மதிப்பீடு செய்தனர். இதில் 6முதல் 8ஆம் வகுப்புக்கான போட்டியில் புனித வளன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஜெரோலின் மரியா முதலிடமும், மாரியம்மன் இந்து மேல்நிலைப் பள்ளி மாணவி இந்துமதி 2ஆம் இடமும், 9 முதல் 12ஆம் வகுப்புக்கான போட்டியில் புனித வளன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி அபிநயா ராஜாத்தி முதலிலிடமும், மாரியம்மன் இந்து மேல்நிலைப் பள்ளி மாணவி ஸ்ரீஜா 2ஆம் இடமும் பெற்றனர். போட்டியில் வென்ற மாணவிகளுக்கு புத்தக தின விழாவில் பரிசுகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை நூலகர்கள் சித்திரைலிலிங்கம், சுப்பிரமணியன் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.