நாட்டார்குளத்தில் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மாணவர்கள் சிறப்பு முகாம் நடந்தது.
முகாமிற்கு முகாம் பொறுப்பாசிரியர் டேவிட் ரத்தினபாலு தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் சுடலை முன்னிலை வகித்தார். நாட்டார்குளம் பங்குதந்தை இருதயசாமி முகாமை துவக்கி வைத்தார்.
பாளையங்கோட்டை அரசினர் சித்த மருத்துவ கல்லூரி சார்பில் இந்த முகாமையொட்டி சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. சித்த மருத்துவ கல்லூரி மருத்துவ துறைத்தலைவர் பூங்கொடி காந்திமதி தலைமை வகித்தார். டாக்டர் அகமது முகைதீன் முன்னிலை வகித்தார். இந்த முகாமில் இலவச சித்த முகாம் மற்றும் நில வேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. 320 பயனாளிகள்கலந்துகொண்டனர். இந்த முகாமில் டாக்டர்கள் மதன், நவீன் குமார், வசந்தன், கவிதா,ராஜேஷ்வரி, பயிற்சி மருத்துவர்கள் விக்னேஷ், டாக்டர் ராஜாமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதன் பின் பொதுமக்களுடன் இணைந்து பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து சிறுவர் சிறுமியர்களுக்கான விளையாட்டு போட்டி நடந்தது. மாலை 4 மணிக்கு கல்லூரி மாணவ மாணவிகள் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
நாட்டார்குளம் புனித சூசையப்பர் கலையரங்கத்தில் நிறைவு விழா நடந்தது. திட்ட இயக்குனர் சகாயராஜ் தலைமை வகித்தார். தாவரத்துறை பேராசிரியர் லியோன் ஸ்டீபன்ராஜ் மூலிகைத் தோட்டம் அமைத்தல் குறித்து பேசினார்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
முகாம் ஏற்பாடுகளை பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி இளநிலை இயற்பியல் இரண்டாம் ஆண்டு மாணவர்கள் செய்திருந்தனர்.