
சாத்தான்குளம் வட்டம் நடுவக்குறிச்சி ஊராட்சிக்குள்பட்ட நல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.
திருச்செந்தூர் கோட்டாட்சியர் தங்கவேல் தலைமை வகித்தார். வட்டாட்சியர் ராஜீவ்தாகூர் ஜேக்கப் வரவேற்றார். முன்னோடி மனுநீதிநாளில் பெறப்பட்ட 118 மனுக்களில் 46 மனுக்கள் ஏற்கப்பட்டு, துறை சார்ந்த அதிகாரிகள் விளக்கமளித்தனர்.
தொடர்ந்து ரூ.1 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இதில், மண்டலத் துணை வட்டாட்சியர் கோமதிசங்கர், வட்ட வழங்கல் அலுவலர் ரதிகலா, வருவாய் ஆய்வாளர் பிரபு, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராணி, மின்வாரிய பொறியாளர் மகாலிலிங்கம், பொதுப்பணித் துறை அலுவலர் கணபதி ரமேஷ், கிராம நிர்வாக அலுவலர் டாலிலிசுபலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ரமேஷ் நன்றி கூறினார்.