தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியன் பட்டனத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் . இவரது மனைவி ராகினி (36). இந்த தம்பதியருக்கு ரிஷிதா (6) என்ற பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் கடந்த 10ம் தேதி ராகினி குழந்தையுடன் வீட்டை விட்டு சென்று விட்டாராம். அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை. இதுகுறித்து ராஜேஷ் அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
மற்றொரு சம்பவம்
தூத்துக்குடி மாவட்டம், கயத்தார் அருகிலுள்ள ஓலைகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லப்பா. இவரது மகள் மகாலட்சுமி (21), பிளஸ் 2 வரை படித்துள்ளார். கடந்த 11ம் தேதி வீட்டை விட்டு வெளிய சென்ற அவர் அதன் பின்னர் திரும்பி வரவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப் பற்றிய தகவல் தெரியவில்லை. இதுகுறித்து செல்லப்பா அளித்த புகாரின் பேரில் கயத்தார் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.


