![](https://www.muthalankurichikamarasu.com/wp-content/uploads/2018/01/12540760_1728421340722452_8479740037831578689_n-copy-1.jpg)
சாத்தான்குளம் ஸ்ரீமன் நாராயண சுவாமி தர்மயுக தர்மபதியில் 30ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு அய்யா கருடவாகனத்தில் பவனி வந்தார். இதில் திரளான மக்கள் பங்கேற்றனர்.
சாத்தான்குளம் ஸ்ரீமன் நாராயண சுவாமி தர்மயுக தர்மபதியில் 30ஆம் ஆண்டு திருவிழா கடந்த மாதம் 23 ஆம்தேதி தொடங்கியது. இதையொட்டி தர்மபதியில் 17 நாள் திருஏடு வாசிப்பு நடைபெற்றது. அய்யா அவதார தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை காலை 9மணிக்கு அன்புக்கொடி மக்கள் ஊர்வலம் நடைபெற்றது. இதையொட்டி அய்யா கருடவாகனத்தில் எழுந்தருளி பவனி வந்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைதொடர்ந்து மதியம் அன்ன தர்மம் வழங்கப்பட்டது.
இதையடுத்து மார்ச் 9ஆம்தேதி அய்யா நாராயணருக்கும், சக்தி கன்னிகைகளுக்கு திருக்கல்யாணம், அதன்பின் தர்மம் வழங்குதல், மார்ச் 10ஆம்தேதி அய்யா சிவன், விஷ்ணு, பிரம்மா,முருகன், ஆகியோரின் இகணை திருமணம் திருஏட்டின் முறைப்படி நடைபெறுகிறது. நிறைவு நாளான மார்ச் 11ஆம்தேதி பகல் உச்சிபடிப்பு, மாலை 6.30மணிக்கு உகப்படிப்பு அன்ன அமுது தர்மம் வழங்குதல், நள்ளிரவு பட்டாபிஷேகம் உள்ளிட்டவை நடைபெறுகின்றன. விழா ஏற்பாடுகளை அய்யாவின் அன்புகொடி மக்கள் செய்து வருகின்றனர்.