சாத்தான்குளம் டி.றி.டி.ஏ. புலமாடன் செட்டியார் தேசிய மேல்நிலைப்பள்ளியில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் டி.றி.டி.ஏ தேசிய மேல்நிலைப்பள்ளி இணைந்து நடத்தும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இதில் சுமார் 35 தனியார் கம்பெனிகள் படித்த மாணவ மாணவிகள் மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் நடத்த உள்ளதாக இருந்தது. ஆனால் 18 தனியார் கம்பெனிகள் மட்டுமே கலந்து கொண்டது. படித்த படிப்புக்கு ஏற்ற வேலை இல்லாமல் இன்சூரன்ஸ் மற்றும் டெக்ஸ்டைல்ஸ் , செக்யூரிட்டி போன்ற வேலைகளுக்கு ஆட்கள் எடுக்கின்றனர். தரமான வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய எந்த கம்பெனியும் இல்லை என மாணவர்கள் வருத்தப்பட்டு செல்கின்றனர்.
சாத்தான்குளம் சுற்றுவட்டார பகுதியிலுள்ள ஏராளமான கிராமங்களுக்கு வேலைவாய்ப்பு முகாம் குறித்த போதிய அறிவிப்பு இல்லாததால் குறைவான அளவே மாணவர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்ட மாணவர்கள் எதிர்பார்த்த கம்பெனிகள் வராமல் காலியாக இருந்ததால் மாணவர்கள் ஏமாற்றமடைந்து தங்களது செல்போன்களில் செல்பி மட்டுமே எடுத்துச்சென்றனர். இதுகுறித்து வேலைவாய்ப்பு அதிகாரிகளிடம் கேட்டபோது முறையான தகவல் இல்லை.
தங்களது நிறுவனங்களை விளம்பரப்படுத்துவதற்காக மட்டுமே இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என மாணவர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.