
அண்மைக்காலங்களில் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சாத்தான்குளம் தச்சமொழி நாடார் தெற்கு தெருவை சேர்ந்த குமார் என்பவரின் மகள் மாலதி(10) சில நாட்களுக்கு முன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் கடந்த 13ம் தேதி அனுமதிக்கப்பட்டார். சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் முறையான மருத்துவ சிகிச்சை இல்லாததால் உயர் சிகிச்சைக்காக நோயாளிகளை பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கின்றனர். இது போன்று மாணவி மாலதியையும் பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி மாலதி உயிரிழந்தார். இதனால் அப்பகுதியில் சோகமாக காணப்படுகிறது. சாத்தான்குளம் பகுதி முழுவதும் குப்பை குளங்களாகவும் சாக்கடை நிறைந்ததாகவும் காணப்படுகிறது. இதனால் மருத்துவர்களால் கண்டறிய முடியாத நோய்கள் பரவுகின்றன. எனவே தமிழக அரசு உடனடியாக இற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்