சாத்தான்குளம் வட்டார, நகர காங்கிரஸ் சார்பில் முன்னாள் வட்டாரத் தலைவர்கள் நினைவாக கட்சிக் கொடியேற்று விழா நடைபெற்றது.
விழாவுக்கு நகரத் தலைவர் க. வேணுகோபால் தலைமை வகித்தார். மேற்கு வட்டாரத் தலைவர் சக்திவேல்முருகன், மாவட்ட துணைத் தலைவர் வி.பி. ஜனார்த்தனம், மாவட்டச் செயலர் து. சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜெயசீலன்துரை வரவேற்றார்.
மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலர் ஊர்வசி அமிர்தராஜ் கலந்துகொண்டு, 3 இடங்களில் கட்சிக் கொடியேற்றி வைத்து பேசினார்.
இதில், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் ஜாக்குலிலின், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கண்மணி ஜெயக்குமார், முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் அலெக்ஸ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலர் இசைசங்கர், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் செயலர் சிவனனைந்தபெருமாள், வட்டாரத் தலைவர்கள் திருச்செந்தூர் சற்குரு, ஸ்ரீவைகுண்டம் நல்லக்கண்ணு, ஆழ்வார்திருநகரி கோதண்டராமன், ஸ்ரீவைகுண்டம் தொகுதி பொதுச் செயலர் ஹைதர்அலிலி, மாவட்ட துணைத் தலைவர் ஸ்ரீராம், ஸ்ரீவைகுண்டம் நகரத் தலைவர் சித்திரை, சாத்தான்குளம் நகர துணைத் தலைவர்கள் வண்ணமுத்து, கதிர்வேல், வட்டார எஸ்டி, எஸ்சி பிரிவு செயலர் லூக்காஸ், தொகுதி ஊடக பிரிவுத் தலைவர் மரியராஜ், பிரவீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் வர்கீஸ் நன்றி கூறினார்.