கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலைகுருசுவாமி கோயிலில் 11 நாள்கள் நடைபெற்ற சித்திரைத் திருவிழா நிறைவடைந்தது.
இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கடந்த 14ஆம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 24ஆம் தேதி வரை 11 நாள்கள் விழா நடைபெற்றது. விழா நாள்களில் கணபதி ஹோமம், யாகபூஜை, சிறப்பு அபிஷேகம், சாயரட்சை பூஜை, சுவாமி உற்சவ விநாயகர் சப்பரத்திலும், ஸ்ரீபாலாதிரிசுந்தரி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, பிற்பகல் 1.30 மணிக்கு நித்யானந்த மண்டபத்தில் அன்னதான பூஜை, தொடர்ந்து மகேஸ்வர பூஜை நடைபெற்றது. மாலை 5.45 மணிக்கு சாயரட்சை பூஜை, இரவு 7.15 மணிக்கு அலங்கார தீபாராதனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன.
ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.