
கருங்குளம் ஒன்றியத்தில் முழுசுகாதர கிராமமாக இராமனுஜம்புதூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக தூத்துக்குடியில் நடந்த குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சி தலைவர் பாராட்டி விருது வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் கருங்குளம் ஒன்றியத்தில் கிராம ஊராட்சிகளில் திறந்த வெளியில் மலம் கழித்தல் அற்றதாக மாற்றிட சிறப்பாக செயலாற்றிய இராமனுஜம்புதூர் பஞ்சாயத்து சிறந்த பஞ்சாயத்தாக தேர்ந்தெடுக்கப்படுள்ளது. இதற்காக பரிசு சான்றிதழை மாவட்ட ஆட்சி தலைவர் வெங்கடேஷ் தூத்துக்குடியில் வைத்து வழங்கினார். கருங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தா விருதினை பெற்றுக்கொண்டார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுப்பையாவுக்கும் வழங்கப்பட்டது. இராமனுஜம்புதூர் பஞ்சாயத்து கிளார்க் இசக்கிமுத்துவுக்கும், செய்துங்கநல்லூர் திடக்கழிவு மேலாண்மை திட்டம், மண்புழு உரம் தாயரித்தலில் சிறப்பாக ஈடுபட்ட பணிதள பொறுப்பாளர் பானு ஆகியோருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.