கருங்குளத்தில் கிருஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடந்தது.
மூன்று நாள்கள் நடந்த போட்டியில் 23 அணிகள் மோதின. முதல் பரிசை பாளையஞ்செட்டிகுளம் அணியினரும், இரண்டாம் பரிசை கருங்குளம் கே.ஜி.எம் அணியினரும், மூன்றாம் பரிசை சிந்தாமணி அணியினரும் பெற்றனர். நிகழ்சியில் பரிசு வழங்கும் விழா மைதானத்தில் வைத்து நடந்தது. சி.எஸ்.ஐ சபை ஊழியர் ஜான்லி ஜோசப் தலைமை வகித்தார், ஊர் தலைவர் பொன்கிருஷ்ணன், செயலாளர் சுயம்புலிங்கம், தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஸ்வீட்டி வரவேற்றார். ஜெபமணி பொன்ராஜ், ராமசந்திரன், டாடா பெருமாள், ராஜா கிஷோர், செல்வராஜ், பிரபாகர் செல்லதாய், மாரிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜாஸ்மின் நன்றி கூறினார்.
இதற்கான ஏற்பாடுகளை கருங்குளம் சி.எஸ்.ஐ. கிறிஸ்து ஆலய இளைஞர்கள் சார்பில் டைசன், பிரேம், ரோசஸ், பிரின்ஸ் தலைமையில் ஊர் மக்கள் செய்திருந்தனர்.