
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் நவத்திருப்பதி ஸ்தலங்கள் மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள நவத்திருப்பதிகளில் ஒன்பது மற்றும் கடைசி ஸ்தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் திருக்கோவிலில் மாசித்திருவிழா வருடம் தோறும் சிறப்பாக நடந்து வருகிறது.
இதைப் போல் இந்த வருடத்திற்கான மாசித்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடியேற்றத்தை தொடர்ந்து தினமும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. கடந்த 28ம் தேதி சிறப்பு கருடசேவை நடந்தது. நேற்று திருவிழாவின் சிறப்பான தேர்த்திருவிழா நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இன்று திருவிழாவின் முக்கிய நிகழ்வான மாசித்தெப்பதிருவிழா மிகவும் சிறப்பாக நடந்தது. இதில் கோவிலில் இருந்து சப்பரத்தில் ஆதிநாதர் மற்றும் முப்பெரும் தேவிகளும் சப்பரத்தில் தெப்பத்தை நோக்கி பவனி வந்தனர். பின்னர் தெப்பத்தில் ஏறி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் எம்பெருமா£னார் பேரருளாளர் ஜீயர் சுவாமிகள், கோவில் செயல் அலுவலர் விஸ்வநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.