ஆர்.எம்.பி.சி.எஸ்.ஐ.பி.எஸ்.கே. இராஜரத்தினம் நினைவு கல்வியியல் கல்லூரியில் கண் தான விழிப்புணர்வு – கருத்தரங்கம் நடைபெற்றது.
சாத்தான்குளம் ஆர்.எம்.பி.சி.எஸ்.ஐ.பி.எஸ்.கே. இராஜரத்தினம் நினைவு கல்வியியல் கல்லூரியில் கண்; தான விழிப்புணர்வு – கருத்தரங்கம் சிவகாசி அரிமா டாக்டர் கணேஷ் அவர்களால் நடத்தப்பட்டது. கல்லூரி முதல்வர் முனைவர் ஜெ.ஜெபசெல்வி வரவேற்புரை நிகழ்த்தினார். டாக்டர் கணேஷ் தமது சிறப்புரையில் கண்ணின் அமைப்பு, கண் தானத்தின்; அவசியம் மற்றும் முக்கியத்துவத்தினை எடுத்துரைத்தார். மேலும் அவர், ஒருவர் இறந்த பிறகு அவரின் விழித்திரையைத் தானமாகக் கொடுக்கலாம், பிறவியிலேயே பார்வை இழந்தோர் கூட கண் பார்வை திரும்ப பெற முடியும் என்று பல கருத்துக்களை எடுத்துரைத்தார். மாணவ -மாணவியரின் பலவித சந்தேகங்களுக்கு தகுந்த விளக்கங்கள் அளிக்கப்பட்டன. இடையிடையே வினாக்கள் கேட்கப்பட்டு சரியான பதிலளித்தோருக்கு சிறப்பு பரிசுகள், ஊக்கப் பரிசுகள் மற்றும் பம்பர் பரிசுகள் வழங்கப்பட்டன. முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவ மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் இரண்டாமாண்டு மாணவியர் செல்வி.ஹேமா மற்றும் செல்வி.எஸ்தர் முதலாமாண்டு மாணவியர் அஞ்சலி மற்றும் முத்துமாரி லீலாவதி ஆகியோர் பின்னூட்டம் வழங்கினர். உடற்கல்வி பேராசிரியர். அகஸ்டின் ஆரோன் நன்றியுரை நிகழ்த்தினார்.
விழா ஏற்பாடுகளை அனைத்து பேராசிரியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.