நாகலாபுரத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பகுதி நேர பயிற்சிகள் ஏப்ரல் 2ம் தேதி தொடங்க உள்ளது.
இது தொடர்பாக ஆட்சியர் என்.வெங்கடேஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : தமிழ்நாடுதிறன் மேம்பாட்டுக் கழகம் (TNSDC) மூலம் உமறுப்புலவர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், நாகலாபுரத்தில் பகுதி நேர(மாலை 4.00மணி முதல் 7.00 மணிவரை மொத்தம் 700 மணிநேரம்) இலவச பயிற்சி வகுப்புகள் 02.04.2018 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நடத்தப்படும் பயிற்சி: ARC & GAS Welding; இப்பயிற்சிக்கான சேர்க்கை உமறுப்புலவர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையம் நாகலாபுரத்தில், 02.04.2018 அன்று நடைபெறவுள்ளதால் நேரில் வந்து விண்ணப்பபடிவங்களை பெற்று பயிற்சியில் சேர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இப்பயிற்சிக்கான கல்வித் தகுதி எட்டாம் வகுப்பு மற்றும் அதற்குமேல். தினசரி பயணப்படியாகரூ.100/- பயிற்சியின் முடிவில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் என்.வெங்கடேஷ் தெரிவித்தார். மேலும் விவரங்களுக்கு 04638242687, 9842197566 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும்.