எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வளர்ச்சிக்கு ரசிகர்களின் பங்கு மிக முக்கியம் என்றால் மிகையாகாது. பஸ் கண்டக்டராக இருந்து இன்று 50 நூல் எழுதிய வரலாற்று எழுத்தாளராக ஆகி இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் வாசகர்கள் தான். தேவி வார இதழில் 1976ல் துணுக்கு எழுத்தாளராக அறிமுகமாகி, பிரபல வார இதழ்களில் தொடர் எழுதி (தினத்தந்தி, தினகரன், சக்தி விகடன்). சைவசித்தாந்த நூல் பதிப்புகழகம், விகடன், தினத்தந்தி, சூரியன், தி தமிழ் இந்து (தமிழ் திசை), காவ்யா, பொன்சொர்ணா என 50 க்கும் மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ளேன் என நினைக்கும் போது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. தாமிரபரணி, ஜமீன்தார்கள், மேற்குதொடர்ச்சிமலை, சித்தர்கள், நெல்லை, தூத்துக்குடி என எனது வரலாறு தொடர்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
இவ்வேளையில் தான் கடந்த 1.01.2018 அன்று muthalankurichikamarasu.com என்ற வெப்சைட் ஒன்றை திறந்தோம். அதில் என்னுடைய நூல் விவரம், என்னுடைய ஆதிச்சநல்லூர் வழக்கு குறித்து அனைத்து ஊடக நண்பர்களும் எடுத்து வெளியிட்ட வீடியோ, ஸ்ரீவைகுண்டம் சுற்றுப்பகுதி செய்திகளை வெளியிட்டு வந்தோம். இந்த 1 1/2 வருடங்களில் 77 நாட்டை சேர்ந்த 62ஆயிரத்து 412 பேர் பார்த்துள்ளனர். இதில் இந்தியாவில் இருந்து 34 ஆயிரத்து 904 பேரும், யூ.எஸ் நாட்டில் இருந்து 3,117 பேரும் பார்த்துள்ளது சந்தோஷத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வெற்றிக்கு காரணமான உங்களுக்கு மிக்க நன்றி. தொடர்ந்து எனது நூல்களை பெறவோ, அல்லது வெப்சைட்டில் படிக்கவோ இந்த வெப்சைட்டுக்கு வாருங்கள். நன்றி நண்பர்களே.
இதுவரை இந்த வெட்சைட்டை பார்க்காதவர்கள் தயவு செய்து இந்த இடத்தில் ஒரு கிளிக் செய்யுங்கள். எனது நூல்களை வாங்கி பயனடையுங்கள் நண்பர்களே. muthalankurichikamarasu.com இந்த வளர்ச்சிக்கு மிக உதவியாக இருக்கும் தம்பி சுடலைமணிசெல்வன், மருமகள் நந்தினி, மகன் அபிஷ்விக்னேஷ், கோபால கிருஷ்ணன், சுமித் உள்பட அனைவருக்கும் நன்றி.