பாளையங்கோட்டை மத்திய நூலகத்தில் வைத்து மனோன்மணியன் பல்கலைகழக தொடர்பியல் துறை ஆய்வு மாணவர் கற்பகசுந்தரம் தொகுத்த 21 நூற்றாண்டு தமிழ் சினிமா, சினிமா ஆய்வு வரிசை 1 என்ற நூல் வெளியிட்டு விழா நடந்தது. இந்த நூலில் மாணவர்கள் கற்பக ராஜ், அசோக், நன்மாறன், அசோக் பால்ராஜன், கலைச்செல்வன், கற்பகசுந்தரம், பாப்பாத்தி, அபிஷ்விக்னேஷ், மகேஷ்வரி ஆகியோரின் கட்டுரையை தொகுப்பாசிரியர் கற்பகசுந்தரம் தொகுத்திருந்தார். மாணவர் கற்பக ராஜா வரவேற்றார். சதக்கப்துல்லா அப்பா கல்லூரி தமிழ் துறை தலைவர் சௌந்தர மகாதேவன் நூலை வெளியிட்டார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு நூலை பெற்றுக்கொண்டார். ரெயின்போ வானொலி அறிப்பாளர் செல்வா தொகுத்து வழங்கினார். தொடர்பியல் துறை பேராசிரியர்ராதா, நூலகர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். மேனாள் இந்து கல்லூரி தமிழ் துறை தலைவர் கட்டளை கைலாசம், சேவியர் கல்லூரி விசுவல் கம்யூனிகேசன் பேராசிரியர் ஜோஸ்பின் பாபா உள்பட பலர் கலந்துகொண்டனர். ரெயின்போ வானொலி அறிப்பாளர் வில்பர்ட் நன்றி கூறினார்.


