தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான சதுரங்கப் போட்டிகள் வருகிற ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நடைபெறவுள்ளன.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட சதுரங்கக் கழகச் செயலாளர் கற்பகவல்லி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சதுரங்க வீரர் மற்றும் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் இந்த மாவட்ட அளவிலான செஸ் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. இப்போட்டிகள் 9, 11, 13, 17 வயதுக்குட்பட்டோர் பிரிவுகள் மற்றும் பொதுப்பிரிவு எனத் தனித்தனியாக நடைபெறுகின்றன.
விண்ணப்பிக்கும் முறை: போட்டியில் பங்கேற்க விரும்புபவர்கள் easypaychess.com என்ற இணையதளம் மூலமாக நுழைவுக் கட்டணத்தைச் செலுத்தித் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், தூத்துக்குடி மாவட்ட சதுரங்கக் கழகத்திற்குச் செலுத்த வேண்டிய மாவட்டப் பதிவுக்கட்டணம் ரூ. 75-ஐயும் இதே இணையதளத்தில் செலுத்திப் பதிவு எண்ணைப் பெற்றிருக்க வேண்டும்.
போட்டியில் பங்கேற்கும் மாண்வ, மாணவிகள் தங்களது பிறப்புச் சான்றிதழ் நகல் அல்லது அடையாள அட்டை நகலைக் கண்டிப்பாகக் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் சிறந்து விளங்கும் மாணவ – மாணவிகளுக்குத் தலா 10 பரிசுகள் வீதம் வழங்கப்படும். இப்போட்டிக்கான ஏற்பாடுகளைத் தூத்துக்குடி மாவட்ட சதுரங்கக் கழகம் மற்றும் காமராஜ் கல்லூரி நிர்வாகம் இணைந்து மேற்கொண்டு வருகின்றன.


