தூத்துக்குடி மாவட்ட எல்கை பகுதியான வசவப்பபுரத்தில் காவல் துறையினர் மற்றும் சமுக தொண்டர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். வெளியிடத்தில் இருந்து வரும் வாகனங்கள் சோதனை மற்றும் விழிப்புணர்வுகளை முறப்பநாடு இன்ஸ்பெக்டர் பார்த்தீபன் தலைமையில் மிகச்சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். முறப்பநாடு காவல்துறைக்கு உதவியாக காவல் ஆய்வாளர் பார்த்திபன் அவர்களுடன் இணைந்து, பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு நிறுவனத் தலைவர், சுகன் கிறிஸ்டோபர் தலைமையில், அமைப்பு நிர்வாகிகள் தன்னார்வலர்களாக தொடர்ந்து 25-வது நாளாக பணியாற்றி வருகிறார்கள். இதற்கிடையில் காவல்துறை கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் வசவப்பபுரம் சோதனைச் சாவடிக்கு வந்தார். அவர் அங்கு பணிபுரியும் காவலர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு கொரோனா தொற்றுலிருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் சமூக இடைவெளியை எந்த விதத்தில் கடைபிடிக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். அதன் பின் அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கினார்கள்.
காவல் ஆய்வாளர் பார்த்திபனோடு இணைந்து, பசுமை தமிழ் தலைமுறை அமைப்பு நிறுவனத் தலைவர், சுகன் கிறிஸ்டோபர் தலைமையில், அமைப்பு நிர்வாகிகள் தன்னார்வலர்களாக தொடர்ந்து 25-வது நாளாக பணியாற்றி வரும் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.