
செய்துங்கநல்லூர் போலீஸ் சரகம் முத்தாலங்குறிச்சி தாமிரபரணி ஆற்றுப்படுகையில் சாரயம் காய்ச்சுவதாக தகவல் கிடைத்தது.
எஸ்.பி உத்தரவின் பேரில் ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி சுரேஷ் குமார் தலைமையில் சப்இன்ஸ்பெக்டர் சிலுவை அந்தோணி மற்றும் போலிசார் அங்கு விரைந்தனர். அப்போது அங்கு 35 லிட்டர் ஊரல் கண்டு பிடித்து அழிக்கப்பட்டது. அதற்கு காரணமான சுப்புகுட்டி மகன் நல்லதம்பி, பூலு மகன் முத்துக்கண் ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.