தூத்துக்குடி மாவட்ட மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற ஜூலை 3ஆம் தேதி நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மீனவர் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் 2026 ஜுலை மாதம் வெள்ளிக்கிழமை 03.07.2026 அன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள முத்து அரங்கில் வைத்து முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பதிவு செய்த ஊர்த்தலைவர்கள் / மீனவ பிரதிநிதிகள் / மீனவர்கள் அனைவருக்கும், பதிவு செய்து கொண்ட பொருள் குறித்து பேச வாய்ப்பு வழங்கப்படும்.
அப்பொருள் மீதான கருத்துக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் அங்கேயே பெறப்பட்டு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கக் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.


