வல்லநாடு சிவன் கோவிலில் வேத பாராயணம் நடந்தது.
வல்லநாட்டில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான ஆவுடை அம்பாள் சமேத திருமூலநாதர் கோவில் உள்ளது. இந்தக் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று நூறு ஆண்டுகளுக்கு மேல் ஆகு விட்டது. கும்பாபிஷேகம் வெகு விரைவில் நடைபெற வேண்டி பல்வேறு யாகங்கள், திருப்பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
தற்போது பாம்பே மணிசர்மா தலைமையிலான குழுவினர் வருகிற 26 ஆம் தேதி வரை தொடர் வேத பாராயணம் நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். கடந்த 22 ந்தேதி முதல் நாள் கணபதி பூஜையுடன் வேத பாராயணம் துவங்கியது. இதற்கான ஏற்பாடுகளைப் பாரதி சங்கரலிங்கம், மாருதி சேதுராமலிங்கம், வெங்கடசுப்பிரமணியன் உள்பட திருமூலநாதர் மகளிர் பக்த பேரவையினர் செய்திருந்தன.
வேத பாராயணத்தில் வல்லநாடு சுற்றுவட்டாரப் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்


