வல்லநாடு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் வழ க்கறிஞர் சுடலைமணி. இவருக்கு பிச்சம்மாள் என்ற மனைவியும் ஹரிஹரன் (19), என்ற மகனும், சிவசக்தி என்ற மகளும் உள்ளனர். ஹரிஹரன் நெல்லையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வருகிறார்.
நேற்று முன்தினம் அவர் படிப்பதாக கூறி தனது வீட்டில் உள்ள மாடி ரூம்புக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் வராத காரணத்தினால் அவரது அறையை தட்டி பார்த்த போது அவர் தூக்கில் தொங்கி இறந்து கிடப்பது தெரியவந்தது.
இது குறித்து முறப்பநாடு போலிசார் வழக்கு பதிவு செய்து ஹரிஹரன் தூக்கில் தொங்க காரணம் என்ன என விசாரித்து வருகிறார்கள்.