வல்லநாடு சாது சிதம்பர சுவாமிகள் சித்தர் பீடத்தில் 38 வது ஆண்டு குருபூஜை விழா மற்றும் 1008 தீப ஜோதி வழிபாடு நடந்தது. இதையொட்டி காலை 8 மணிக்கு அகவல் பாராயணம் நடை பெற்றது. 12 மணிக்கு குருபூஜை வழிபாடு நடந்தது. தொடரந்து அன்னதானம் நடைபெற்றது. 6.30 மணிக்கு கோ பூஜை நடந்தது. 6.45 மணிக்கு அருள் ஜோதி ஆனந்த சபையில் 1008 தீப ஜோதிவழிபாடு நடந்தது. திருஅருட்பா, தேவாரம், திருவாசகம், திருபல்லாண்டு பாடப்பெற்ற ஜோதி வழிபாடு மகா தீபாரதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்ககணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தீப தரிசனம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் வல்லநாடு சாது சிதம்பர சுவாமிகள் அறக்கட்டளை தலைவர் சுப்பையா,செயலாளர் சிவானந்தம், உறுப்பினர்கள் ஓய்வு பெற்ற ஐ.ஜி மாசனமுத்து, ராஜேந்திரன் ஐ.எ.எஸ், நடிகர் மயில் சாமி உள்பட பலர் கலந்துகொண்டனர். இரவு 7 மணிக்கு தஞ்சை திருமழையூர் சதாசிவம் குழுவினர் அருட்பா கச்சேரி நடைபெற்றது. தெடார்ந்து மங்கள இசை நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தொண்டர் குலத்தினர் செய்திருந்தனர்.