
இராமனுஜம்புதூரில் பாலம் அமைக்க தோண்டிய பள்ளத்தினால் பொது மக்கள் அவதியுற்று வருகின்றனர்.
ஸ்ரீவைகுண்டம் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமானது சேரகுளம் & மூலைக்கரைப்பட்டி சாலை. இந்த சாலையில் இராமனுஜம்புதூர் அருகே தாம்போதி ஒன்று இருந்தது. இந்த தாம்போதி மழைக்காலங்களில் நீரில் மூழ்கி இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வந்தன. எனவே இந்த இடத்தில் பாலம் அமைக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு இந்த இடத்தில் பாலம் கட்ட நெடுஞ்சாலை துறையினரால் குழி தோண்டப்பட்டது. ஆனால் இந்த குழியை அப்படியே போட்டு விட்டனர். போக்குவரத்து அருகில் உள்ள மண் தடத்து வழியாக நடைபெறுகிறது. குழி தோண்டிய இடத்தில் மழை தண்ணீர் தேங்கி சுகாதர மற்ற நிலையில் காட்சியளிக்கிறது.
இது குறித்து முன்னாள் கவுன்சிலர் கணேசன் கூறும்போது,
இந்த பகுதி போக்குவரத்து நிறைந்த பகுதி. இந்த தாம்போதியை பாலமாக்க வேண்டும் என பல காலமாக முயற்சி செய்து வருகிறோம். தற்போது இந்த பாலம் அமைக்க குழி தோண்டி மூன்று மாதங்கள் ஆகிறது. ஆனால் பணி எதுவும் நடைபெறவில்லை. மழைதண்ணீர் தேங்கி கொசு உற்பத்தி ஆகி வருகிறது. இதற்கிடையில் போக்குவரத்து அருகில் உள்ள மண் தடத்தின் வழியே நடைபெறுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பருவ மழை பெய்யும் முன்பு இந்த இடத்தில் பாலம் கட்டி தரவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த இடத்தில் உடனடியாக பாலம் கட்டி தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.