வல்லநாட்டில் காசநோயாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
துணை இயக்குனர் மருத்துவப் பணிகள் டாக்டர் சுந்தரலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட நலக்கல்வியாளர் தங்கவேல் வரவேற்றார். வட்டார மருத்து அலுவலர் டாக்டர் சுந்தரி முன்னிலை வகித்தார். சாராள் தக்கர் கல்லூரியின் ஓய்வு பெற்ற பேராசிரியர் லைமா சாமுவேல் சார்பில் காசநோயாளிகளின் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
டாக்டர் சுந்தரலிங்கம் பேசும் போது, வல்லநாட்டில் தமிழக அரசின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்த 18 வயது முதல் 65 வயது வரையுள்ள காசநோயளிகளக்கு மாதம் தோறும் ரூ 1000 வழங்கப்பட்டு வருகிறது. 2018 ஏப்ரல் முதல் நிக் ஷை போஜன் யோஜனா திட்டத்தின் கீழ் ஊட்டசத்து நிலைய மேம்படுத்திட சிகிச்சை காலங்களில் மாதந்தோறும் ரூ500 வழங்கப் பட்டு வருகிறது. 2019 பிப்ரவரி முதல்அவர்களுக்கு சத்துணவு வழங்கப் பட்டு வருகிறது. காசநோய் மூலமாக 3 லட்சம் குழந்தைகள் படிப்பை இழக்கின்றனர். அவர்கள் நலன் கருதி தனியார் துறை ஒருங்கிணைப்புடன் கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சியில் மாவட்ட காசநோய் மைய தீர்வு முறை அமைப்பாளர் குப்புசாமி, சித்த மருத்துவ மருந்தாளுநர் வெங்கடேசன், நம்பிக்கை மைய ஆற்றுப்படுத்துநர் ஐயம்மாள், ஆய்வக நுட்புநர் உஷாரணி, சுகாதார பணியாளர் வேம்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் அப்துல் ரஹீம் ஹீரா நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை திருத்தியமைக்கப்பட்ட தேசிய காசநோய் தடுப்புத் திட்டம், வல்லநாடு காசநோய் பிரிவு இணைந்து செய்திருந்தது.
;