வல்லநாட்டில் தரம் உயர்த்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் கடம்பூர் ராஜீ திறந்து வைத்தார்.
மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் முன்னிலை வகித்தார். சுகாதர பணிகள் துணை இயககுனர் கீதா ராணி வரவேற்றார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாட்டில் செயல்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 34 லட்ச ரூபாய் செலவில் நலவாழ்வு மையமாக தரம் உயர்த்தப்பட்டது. அதனை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜீ திறந்து வைத்தார். அதன்பின்ர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அமைச்சர் கடம்பூர் ராஜீ பேசுகையில், கிராமங்கள் பயன்பட அம்மா மருத்துவமுகாம் என உருவாக்கி கிராமங்கள் தோறும் மருத்துவ வசதி உருவாக்கியது, மாவட்டம் தோறும் அரசு மருத்துவகல்லூரிகள் நிறுவியது அதிமுக ஆட்சியில் தான். கடந்த 2011ம் ஆண்டு மட்டும் 7 புதிய மருத்துவகல்லூரிகள் நிறுவப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 4 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தைப்பொறுத்தவரை டெங்கு, பன்றிக்காய்ச்சல் இல்லாத மாவட்டமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக 1300 பேர் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தினம் தோறும் வீடு வீடாகசென்று கண்காணித்து வருகின்றனர். உடல்நிலை சரியில்லாதவர்களை மருத்துவமனையில் சேர்ப்பதற்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் சித்த மருத்துவம் மூலமாக 300 நிலவேம்பு கசாயம் கொடு’கப்பட்டது. குழந்தைகள் ஊட்டசத்து சார்பில் காய்கறி கண்காட்சி அமைககப்பட்டிந்தது. இதை அமைச்சர் கடம்பூர் ராஜி, மாவட்ட ஆட்சி தலைவர் சந்தீப் நந்தூரி ஆகியோர் துவககிவைத்தனர். மாவட்ட சித்த மருத்துவர் ராஜசெல்வி, வல்லநாடு சித்த மருத்துவர் செல்வகுமார், குழந்தைகள் ஊட்டசத்து அமைப்பாளர் செண்பகசாரதா, ஒன்றிய ஆணையாளர் சுப்பிரமணியன் ,வசந்தா, முன்னாள் சேர்மன் பிச்சையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.