
ஸ்ரீவைகுண்டம் தாலூகா அலுவலகத்திற்கு உள்பட்ட இடங்களில் உள்ள நதிவழி புறம்போக்கில் கட்டபப்பட்ட ஆககிரமிப்பு கட்டடிங்கள் இடிக்கும் பணி நடந்து வருகிறது. இராமனுஜம்புதூரில் இலுப்பைகுளம் கரையோரத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் பணி நடந்தது. இதில் கட்டப்பட்ட 14 கடைகள் மற்றும் 4 வீடுகள் இடிக்கப்பட்டது.
ஸ்ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன், மண்டல துணை தாசில்தார் ராகவன், மணிமுத்தாறு பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் ரமேஷ், செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் அய்யனார், கிராம நிர்வாக அதிகாரிகள் கந்த சிவசுப்பு, ஆனந்த ஏகாந்த மூர்த்தி, பாண்டிபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் எல்கைக்கு உள்பட்டஇந்த இடங்களில் நதிநீர் போக்குவரத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற 21 நாள்களுக்கு முன்பு நோட்டீஸ் அனுப்பபட்டது. சம்பந்தப்பட்டவர்கள் காலி செய்யாத காரணத்தினால் தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளது. இதே போல் செய்துங்கநல்லூர் பஞ்சாயத்து தூதுகுழி, முத்தாலங்குறிச்சி, விட்டிலாபுரம் பஞ்சாயத்து நாட்டார்குளம் போன்ற இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனே அகற்றி தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விரைவில் அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தாசில்தார் சந்திரன் தெரிவித்தார்.