ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனையில் காசநோயாளிகளுககு மருந்து வழங்கும் முகாம் நடந்தது.
மாநில காசநோய் பிரிவு விளம்பர அலுவலர் சண்முகசுந்தரம் தலைமை வகித்தார். தீர்வு முறை அமைப்பாளர் குப்பு சாமி, மாவட்டஅரசு மற்றும் தனியார் துறை ஒருங்கிணைப்பாளர் மோகன், சித்தமருத்துவர் ரதி செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காசநோய் பிரிவு முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் மாரிமுத்து வரவேற்றார். தலைமை மருத்துவர் வெங்கட்ரங்கன், டாகடர் பொன் இசககி, உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.
திருத்தி அமைககப்பட் தேசிய காசநோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் ஏரல் காசநோய் அலகு மற்றும் ஸ்ரீவைகுண்டம் அரசு மருத்துவமனை, சித்த மருத்துவ துறை இணைந்து இந்த முகாமை நடத்தியது. இறுதியாக சுகாதார பார்வையாளர் சுதா மணிமேகலை நன்றி கூறினார்.