வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மற்றும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், இணைந்து தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திராவிட முன்னேற்றக் கழக கட்சியின் தலைவர் தளபதி மு க ஸ்டாலின், உத்தரவின் பேரில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள எம்,பி எம்,எல்,ஏ,க்கள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து, என அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகிறார்கள் ,இதுபோல வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்த திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, இணைந்து வட்டார மருத்துவர் அலுவலர் சுந்தரியிடம் கை கழுவும் சோப்புகளை வழங்கினார்கள் , அதுமட்டுமில்லாமல் வல்லநாடு கஸ்பா பஞ்சாயத்து தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், சர்க்கரை போன்ற மளிகை மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்கள்.
கருங்குளம் வடக்கு திமுக ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ராமசாமி,மாணவரணி அமைப்பாளர் வீரபாகு,இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ்,வல்லநாடு கஸ்பா பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன், வல்லநாடு கஸ்பா பஞ்சாயத்து துணைத்தலைவர் திமுக கிளைச் செயலாளர் மாரிமுத்து ,மற்றும் முருகன், லோககிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.


