செய்துங்கநல்லூர் அருகே முறப்பநாடு சுற்றுவட்டார பகுதியில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் ஏழை எளியவர்கள், மற்றும் ரோட்டோரத்தில் தனிமையில் வாடும் மக்களுக்கு, முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், சுற்று வட்டார கிராம பொதுமக்கள், சார்பில் ஊரடங்கு முடியும் வரை உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த ஏற்பாடுகளை டி,எஸ்,பி கலைதிரவன் துவக்கிவைத்தார்.
ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் முறப்பநாடு சுற்றியுள்ள பதினைந்து கிராமங்களிலுள்ள ஏழை, எளிய, மற்றும் ரோட்டோரங்களில் இருக்கும் ஆதரவற்றவர்களுக்கு, ஊரடங்கு முடியும்வரை முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், முறப்பநாடு சுற்றியுள்ள 15 கிராமத்து பொதுமக்கள் ஒத்துழைப்பால் உணவின்றி தவிப்பவர்களுக்கு உணவு வழங்க முடிவு செய்தனர், இந்த உணவுகளை வல்லநாடு அருகே உள்ள சாது சிதம்பர சுவாமிகள் அறக்கட்டளை, சார்பில் தினம்தோறும் தயார் செய்து தருவதற்கு சாது சுந்தர அறக்கட்டளை சார்பில் ஒத்துழைப்பு தந்தார்கள், அதுமட்டுமில்லாமல் அங்கு வந்த டி,எஸ்,பி கலை கதிரவன், தன்னார்வலர் தொண்டர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி, இந்த சேவையை சிறப்பாக செய்யும்படி அறிவுறுத்தி இந்த உணவு வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் டி,எஸ்,பி கலை கதிரவன் கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன், முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை, அரசு வழக்கறிஞர் அன்பு அங்கப்பன், சாது சிதம்பர சுவாமிகள் அறக்கட்டளை நிர்வாகி சந்தானம், கணக்கர் சிவ சண்முகசுந்தரம், வல்லநாடு கஸ்பா பஞ்சாயத்து தலைவர் சந்திரா முருகன் ,கீழ புத்தனேரி பஞ்சாயத்து தலைவர் ஜெயபாரதி சோமு, சமூக ஆர்வலர் அகரம் மணிகண்டன், மற்றும் தன்னார்வலர் தொண்டர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்