சிரித்த முகத்தோடு இருக்கும் டி.டி.வி தினகரன் தான் முதல்வராகவேண்டும் என அங்காடி தெருவில் நடித்த நடிகர் மற்றும் தூத்துக்குடி 41 வது அமமுக கட்சி வட்ட செயலாளர் காசிலிங்கம் பேசினார்.
ஒட்டபிடாரம் தொகுதியில் அமமுக கட்சி வேட்பாளர் சுந்தர் ராஜனை ஆதாரித்து பிரச்சாரம் செய்ய வி.கோவில்பத்து வந்தார். அவர் கூறும் போது சிரித்த முகத்தோடு மக்களை சந்திக்கும் டி.டி.வி தினகரன் தான் தமிழகத்தினை ஆள தகுதியான நபர். அவர்தான் முதல்வராக வரவேண்டும் .எனவே ஓட்டபிடாரம் தொகுதியில் ஏற்கனவே எம்.எல்.ஏ வாக இருந்த சுந்தரராஜன் தான் வெற்றி பெறவேண்டும். எனவே மக்கள் பரிசு பெட்டகம் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என வீடு வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அவருடன் தூத்துக்குடி வர்த்தக பிரிவு செயலாளர் ஒ.பி. முஸ்தபா, எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் செல்லப்பா, செய்தி பிரிவு ஒன்றிய செயலாளர் ஐயப்பன், கார்த்திக், மந்திரம், சாகுல் அமீது, சமஸ், இஸ்மாயில் தூத்துக்குடி மேற்கு அம்மா பேரரவை செயலாளர் பால்பாண்டி, செம்புலிங்கம், ரவி, ராஜா, வேல் சாமி, பாலா உள்பட பலர் உடன் சென்றனர்.