ஓட்டப்பிடாரம் தொகுதியில் கருப்பசாமி பாண்டியன் தலைமையில் திமுக வினர் வாக்கு சேகரித்தனர்.
செய்துங்கநல்லூர் உள்ள அண்ணாசிலைக்கு மாலை அணிவித்த அவர். வி.கோவில் பத்து, விட்டிலாபுரம், முத்தாலங்குறிச்சி, சென்னல்பட்டி, பக்கப்பட்டி உள்பட கிராமங்களில் உள்ள பூத் கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து பேசினார். முத்தாலங்குறிச்சி காமராஜர் தெருவுக்கு சென்ற போது அங்குள்ள மக்கள் முத்தாலங்குறிச்சி கிராமத்துக்கு டாக்டர் கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த போது தனிக்கால்வாய் திட்டத்துக்கு திட்டம் வகுக்கப்பட்டது. இதுவரை அதற்கான நடவடிக்கை எதுவும் இல்லை. ஊருக்கு சாலை வசதியும் கிடையாது. 1996 ல் கலைஞர் ஆட்சியின் போது திட்டம் மீண்டும்புத்துயிர் பெற்றது. தற்போது அதுவும் கிடப்பில் போட்டு விட்டார்கள். எனவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பஞ்சாயத்து துணை தலைவர் நடராஜன் தலைமையில் ஊர் மக்கள் கோரிக்கை வைத்தனர்.
கருப்பசாமி பாண்டியன் , நான் தென்காசி தொகுதி எம்.எல்.ஏ வாக இருந்த போதே மருதூர் மேலக்கால் வெள்ளூர் குளத்துக்கு விவசாயத்து தண்ணீர் கொண்டு செல்ல பாடுபட்டவன். இந்த தேர்தல் அதிமுக அரசை வீட்டுக்கு அனுப்பு தேர்தல். எனவே இந்த தேர்தலில் திமுகவிற்கு வெற்றி தர பாடுபாடுங்கள். நாங்கள் மக்களுக்குதேவையான அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைப்போம் என பேசினார்.
அவருடன்பாளையங்கோட்டை எம்.எல்.எ மைதீன்கான். முன்னாள் எம்.எல்.எ மாலைராஜா, கருங்குளம் ஒன்றிய திமுக செயலாளர் நல்ல முத்து, முன்னாள் சேர்மன் சுடலைபாண்டியன், குமார், சேக்அப்துல் காதர், டாக்டர் கலீல் ரகுமான், வேல் முருகன், கால்வாய் நம்பி, பக்கப்பட்டி சுரேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.