செய்துங்கநல்லூர் அருகில் உள்ள புளியங்குளம் முத்தாரம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பரமேஸ்வரி(45). இவர் செய்துங்கநல்லூர் போலிஸ் நிலையத்தில் பி.ஜே.பி கட்சியினர் மீது வீடு வாங்கி தருவதாக மோசடி செய்தாக புகார் கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது. புளியங்குளத்தில் பிரதமர்மோடியின் திட்டத்தின் கீழ் சமத்துவபுரம்அமைத்து தருவதாக வீட்டுக்கு 10 ஆயிரம் முன் பணம் கொடுக்க வேண்டும் என புளியங்குளத்தினை சேர்நத பி.ஜே.பி மாவட்ட செயலாளர் ராமகனி, கருங்குளம் ஒன்றிய பி.ஜே.பி தலைவர் பெரியசாமி ஆகியோர் சுமார் 55 பேரிடம் முதல் தவணையாக ரூ 350 பெற்று கொண்டனர். அதோடு மட்டுமல்லாமல் முதல் கட்டமாக இலவச பட்டா பெற வேண்டும் என மாவட்ட ஆட்சி தலைவரிடம் மனுகொடுக்கவும் கூட்டிச்சென்றனர். ஆனால் இலவச பட்டாவும் வரவில்லை, வீடு கட்டி கொடுக்க நடவடிக்கையும் இல்லை. எங்களிடம் வாங்கிய பணத்தினை திருப்பி தாருங்கள் என கேட்டால், தேர்தலுக்குள் தருகிறேன் என்றார் ராமகனி. தற்போது தேர்தல் முடிந்தும் தரவில்லை. மீண்டும் கேட்டபோது எங்களை தகாத வார்த்தைகளால் திட்டுகிறார். எனவே அவர்கள் இருவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு கொடுத்தார்.
இந்த மனுவை பெற்றுகொண்ட செய்துங்கநல்லூர் போலிசார் ராமகனி, பெரியசாமி மீது விசாரணை நடத்தி வருகிறார்கள்.