இது தாெடர்பாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, வெளியிட்ட செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் 83 முதன்மை அங்கன்வாடி பணியாளர்கள், 2 குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 130 அங்கன்வாடி உதவியாளர்கள் ஆக மொத்தம் 215 காலி பணியிடங்களுக்கு தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதி விவரம்:
அங்கன்வாடி பணியாளர் பணியிடத்திற்கு உள்ளுரில் வசிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அனைத்து பணியிடங்களும் மாவட்டத்தினை ஒரு அலகாக கொண்டு காலிப்பணியிடங்கள் ஏற்பட்ட நாளின் அடிப்படையில் 200 புள்ளிகள் கொண்டு இனச் சுழற்சி முறை கடைபிடிக்கப்படும். தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு, வயது உச்ச வரம்பில் மூன்றாண்டுகள் தளர்வு செய்து காலிப்பணியிடங்களை நிரப்பும் போது கண்டிப்பாக கடைபிடிக்கப்படும். மாற்றுத்திறனாளிகளில் அங்கன்வாடி மையத்தில் உள்ள 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளை கவனிக்கும் வகையில் உள்ள உடல்திறன் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு (only loco Motor Disability) 4% reservation நியமனம் செய்யப்படும்.அன்னார் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலகம் வாயிலாக தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்.
அங்கன்வாடி மையத்திற்கு தேர்வு செய்திட அதே கிராமத்தைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும். தகுதியான நபர் அதே கிராமத்தில் இல்லாவிடில் அதே கிராம பஞ்சாயத்தைச் சேர்ந்த அருகிலுள்ள கிராமத்தைச் சேர்ந்தவரை தேர்ந்தெடுக்கப்படும். குறிப்பிட்ட கிராம பஞ்சாயத்தில் தகுதியான நபர் கிடைக்கப்பெறாவிடில் 10 கி.மீ. தொலைவிற்கு உட்பட்ட அருகிலுள்ள பஞ்சாயத்தை சேர்ந்தவரை தேர்ந்தெடுக்கப்படும். நகர்புறங்களில் அங்கன்வாடி பணியாளர் அதே வார்டு-ஐ சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். தகுதியான நபர் அதே வார்டில் இல்லையெனில், அருகிலுள்ள வார்டினை சேர்ந்தவரை தேர்ந்தெடுக்கப்படும்.
விண்ணப்பதாரரின் வசிப்பிட ஆதாரமாக கீழ்கண்ட ஏதேனுமொரு சான்று இணைக்கப்பட வேண்டும். 1. வாக்காளர் அடையாள அட்டை 2. வீட்டுவரி இரசீது 3. குடும்ப அட்டை 4. ஆதார் அட்டை காலிப்பணியிடங்கள் விவரம் மற்றும் அவற்றுக்கான இனசுழற்சி விவரம் ஆகியவை அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்கள் மற்றும் மாவட்ட ஆட்சியரக விளம்பர பலகைகளில் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை https://thoothukudi.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சான்றுகளின் நகல்களுடன் மற்றும் இதர ஆவணங்களுடனும் 30.01.2019 முதல் 08.02.2019 முடிய மாலை 5.00 மணிக்குள் அந்தந்த வட்டார குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகங்களில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சமர்ப்பிக்கும் போது விண்ணப்பம் பெற்றுக் கொண்டதற்கான ஒப்புகை இரசீது வழங்கப்படும். என மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, தெரிவித்துள்ளார்.