கருங்குளம் கூழையாத்து சுடலை கோயில் கொடை விழா நடந்தது.
இதையொட்டி மாலையில் கருங்குளம் காமராஜர் தெருவில் உள்ள கோயில் வீட்டில் இருந்து சுவாமி பொருள்கள் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. பின் தாமிரபரணி ஆற்றங்கரை கள்ளிக்காட்டில் உள்ள கூழையாத்து சுடலைக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. தொடர்ந்து பூஜை நடந்தது, சுவாமி வேட்டைக்கு சென்று வந்து அருள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பின் திரளை கொடுக்கும் நிகழ்வு நடத்தப்பட்டது. அதிகாலை சுவாமிக்கு படப்பு சோறு எடுத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் உள்ளூர் மட்டுமல்லாமல் சென்னை மும்பை உள்பட பல இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கருங்குளம் கள்ளிகாடு கூழையாத்து சுடலை கோயில் கொடை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.