இராமனுஜம்புதூரில் அடிப்படை வசதி செய்து தர திமுக ஆட்சி மலர வேண்டும் என்று கனிமொழி எம்பி பேசினார்.
இராமனுஜம்புதூரில் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. மாவட்ட திமுக செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். ஊராட்சி செயலாளர் ஸ்ரீரெங்கன், ஒன்றிய செயாளர் நல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நீண்ட நாளாக பூட்டிகிடக்கும் இராமனுஜம்புதூர் நூலகம், துணை சுகாதர நிலையம், திறக்காமல் இருக்கும் சேவை மையத்தினை திறக்க வேண்டும். அரசர்குளத்துக்கு தனி ரேசன் கடை அமைக்கப்படவேண்டும். வெட்டிகுளத்துக்கு சாலை அமைக்க வேண்டும். தூத்துக்குடியில் இருந்து இராமனுஜம்புதூருக்கு நேரடி பேருந்து வசதி, இராமனுஜம்புதூர் அரசுமேல்நிலைப்பள்ளிக்கு சாலை, இராமனுஜம்புதூர் சாக்கடை வாறுகால் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் இராமனுஜம்புதூர் அரசு கலைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேசன் கடைக்கு புதிய கட்டிடம் கட்டி தரவேண்டும். குடிதண்ணீர் பிரச்சனை நிரந்தரமாக தீர்க்க வேண்டும் என்பது உள்பட பல கோரிக்கையை பொதுமக்கள் விடுத்தனர்.
அதன் பின் கனி மொழி எம்.பி. பேசும் போது, மக்களுக்கு தேவையான குறைகளில் பெரும்பாலான குறைகள் உள்ளாட்சி தேர்தல் வைத்திருந்தாலே போதும், குறைகள் தீர்க்கப்பட்டிருக்கும். ஆனால் தோல்வி பயத்தினால் தேர்தலை தள்ளிப்போடுகிறது அரசு. திமுக ஆட்சி வந்தவுடன் மக்களுக்கு தேவையான அனைத்து பிரச்சனைகளும் தீர்க்கப்படும். என்று அவர் பேசினார்.


