செய்துங்கநல்லூர் திருவரங்கசெல்வியம்மன் கோயிலில் திருமால் பூஜை விழா நடந்தது.
இதையொட்டி அதிகாலை நடைதிறக்கப்பட்டது. சிவன் கோயிலில் இருந்து பால்குடம் எடுத்து வரப்பட்டது. ஊரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக கோயிலை பால்குடம் வந்தடைந்தது. அதன்பின் அம்மனுக்கு அபிசேகம் அலங்காரம், ஆராதனை நடந்தது. மாலை 7 மணி அளவில் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மன் வீதி உலா வந்தார். அன்னதான சத்திரம், அண்ணாநகர், கஸ்பாவேளாளர்தெரு, மெயின் பஜார், பிள்ளையார் கோயில் தெரு, வி.கோவில்பத்து வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது.
இதற்கான ஏற்பாடுகளை பிள்ளைமார் சமுதாயத்தினை சேர்ந்த மக்கள் செய்திருந்தனர்.