தாதன்குளம் எம்.ஜி.பி. கருணா குழந்தைகள் காப்பகத்தில் கிறிஸ்துமஸ் விழா நடந்தது.
ஜெயின் டேனியல் தலைமை வகித்தார். வினித் ஆப்ரகாம், சிலின் நிச்சோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சகோதரர் பிஜீ தம்பான் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கொங்கராயகுறிச்சி சேகரகுரு செல்வமணி, தாதன்குளம் பள்ளி தலைமை ஆசிரியர் மல்லிகா, சின்னமாடன் குடியிருப்பு தலைமை ஆசிரியர் ஜேம்ஸ்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. கிறிஸ்து மஸ் தாத்தா வேடமணிந்து வந்தவர் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியை முன்னாள் மாணவர் சுரேஷ்குமார் தொகுத்து வழங்கினார். சகோதரி ரூத் நன்றி கூறினார். முன்னாள் மாணவர்கள் பால்ராஜ், சரண், துரை, சங்கர், முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.