கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அமைப்பு சார்பில் கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி பிரிந்து, நேரில் சென்று வழங்கினர்.
கடந்த நவம்பர் 29 ந்தேதி முதல் கஜாபுயலால் பாதிககப்பட்டவர்களுக்கு உதவும் பொருட்டு கல்லூரி முடிந்தவுடன் ஒவ்வொரு இடமாக சென்று நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பொருள் சேகரித்தனர். சுமார் 1 லட்ச ரூபாய் நிதியை அவர்கள் பிரித்து மக்களுக்கு தேவையான போர்வைகள், லுங்கி, துண்டு, பாய், கொசுவர்த்தி, ரவை பிஸ்கட், பிரட், பால்பவுடர், டீ பவுடர் , சோப்பு, பல்பொடி, தீப்பெட்டி ஆடைகள் மற்றும் தூய்மை பணிகளை மேற்கொள்ள மண்வெட்டி, மரம் அறுக்கும் இயந்திரம், மண்தட்டுகள் உள்பட பல பொருள்களை சேகரித்தனர். அதன்பின் கல்லூரி மாணவர்கள் 30 பேருடன் கல்லூரி பேருந்தில் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடி வட்டம் குடுமியான் மலை வேளாண்மைக்கல்லூரி விடுதியில் தங்கியிருந்தபடியே, அப்பகுதியில் பாதிக்கப்பட்ட பொது இடங்களில் சாய்ந்து கிடந்த மரங்களை அகற்றியும் சில மரங்களுக்கு உயிரூட்டியும் அசுத்தமான இடங்களை சுத்தம் செய்து களப்பணியில் ஈடுபட்டனர். கரம்பன் குடியை அடுத்த தீர்த்தான்குளும் பகுதியிலும் அவர் பணி செய்து, பாதிககப்பட்ட மக்களுககு தாங்கள் கொண்டு சென்ற பொருள்களை பிரித்து கொடுத்தனர். தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியை அடுத்த துறையூர் ரெகுநாயகியபுரத்தில் வெகுவாக பாதிககப்பட்ட தென்னை மரங்களை பார்வையிட்டனர். அங்குள்ள மக்களுககு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தனர். இவர்களுக்கு தஞ்சாவூர் சரக காவல் துணை தலைவர் லோகநாதன், புதுக்கோட்டை காவல் ஆய்வாளர் ஜெகதீசன், புதுக்கோட்டை தோட்டக்கலை துணை இயக்குனர் சிவக்குமார், வேளாண் அலுவலர் இராதாகிருஷ்ணன், கரம்பக்குடி வேளாண் அலுவலர் இரவி ஆகியோர் உடன் வந்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கிள்ளிகுளம் வேளாண்மைக்கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் முனைவர் இராஜாபாபு செய்திருந்தார்.