ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 லட்சம் மதிப்பிலான சித்த மருத்துவப் பிரிவு புதிய கட்டிடத்தை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
உலகம் முழுவதிலுமே கொரானா வைரஸ் தாக்குதல் மனித இனத்திற்கு அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. மார்ச் 22ஆம் தேதி முதல் சுய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. சமூக இடைவெளியை பின்பற்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் தமிழகத்தில் கொரோனா நோய் பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழக முதல்வர் அதற்கென பல்வேறு துறை அலுவலர்களுடன் சிறப்பு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி தினமும் நடத்தி கொரானா நோய்த் தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
தலைமை செயலக அலுவலர்களுடனும் மாவட்ட ஆட்சியர்களுடனும் அந்தந்த மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நோய் பரவல் குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உயிரிழப்பு 0.6 சதவீதமாக உள்ளது. நோய்த்தொற்றை கண்டறிந்து அவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க மாவட்டத்தில் மூன்று ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கொரானா பரிசோதனை மற்றும் சிகிச்சையை மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 12 மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையம் மூலம் கொரோனாவுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கொரோ தொற்றிற்காக சித்த மருத்துவ பிரிவில் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
வல்லநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சித்த மருத்துவத்திற்காக ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் தனி கட்டிடம் கட்டப்பட்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. சின்னத்திரை பணியாளர்கள் ஊரடங்கு காலத்தில் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக உள்ளரங்கில் சூட்டிங் நடத்த அனுமதிக்க பட்டுள்ளது. சினிமாத்துறை ஷ¨ட்டிங் நடத்த தற்போது வாய்ப்பு இல்லை. இதுகுறித்து தமிழக முதல்வர் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பார்.என்றார் அவர்