ஶ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தில் ராமர் கோவில் கட்டுமானப்பணிக்கு ஆதரவு தெரிவித்து
இந்து மக்கள் கட்சி சார்பாக பூஜைகள் நடந்தது.
ராமர் கோவில் கட்டுமானப்பணிக்காக பூமி பூஜை அயோத்தியில் நடைபெற்றது. பூமி பூஜை விழாவிற்கு வந்த பிரதமர் மோடி முதல் வெள்ளி செங்கலை எடுத்துக்கொடுத்து அடிக்கல் நாட்டுவிழாவை தொடங்கி வைத்தார். இந்திய வரலாற்றில் மிக முக்கியமான நாளான ராமர் கோவில் கட்டுமானப்பணிக்காக பூமி பூஜை நடைபெற்றது.
இதனை கொண்டாடும் விதமாக ஶ்ரீவைகுண்டம் அருகே உள்ள புளியங்குளம் கிராமத்தில் ராமர் கோவில் கட்டுமானப்பணிக்கு ஆதரவு தெரிவித்து இந்து மக்கள் கட்சி சார்பாக பூஜைகள் நடந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த ராமர் படத்துக்கு மாலை அணிவித்து வழிபட்டனர்.
இதில் தூத்துக்குடி மாவட்ட இந்து மக்கள் கட்சி தலைவர் கணேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கோவிந்தன், இளைஞரணி தலைவர் முருகன், கருங்குளம் ஒன்றிய செயலாளர் வேம்பு, புளியங்குளம் கிராம மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


