தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த வேண்டும் என்று ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்கம் சார்பில் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் மேலும் இந்த ஏறு தழுவுதல் பாதுகாப்பு இயக்கத்தினர் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நாடாளுமன்ற எம்.பி. ரவிந்தரநாத்குமார் ஆகியோரிடம் இதுகுறித்து மனு அளித்தனர்.
அதன் அடிப்படையில் இன்று தூத்துக்குடி மாவட்ட சார் ஆட்சியர் சிம்ரான் ஜித்சிங்க ஹாலோன், ஸ்ரீவைகுண்டம் வட்டாச்சியர் சந்திரன், அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் உள்ள இடங்களையும் ஸ்ரீவைகுண்டம் புதிய பாலத்தின் பகுதியிலும் ஆய்வு மேற்கொண்டனர். அதன்பின்னர் ஸ்ரீவைகுண்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.