தூத்துக்குடி மில்லர்புரம் சேகரம் தூய பவுலின் ஆலயத்தின் 59-ஆவது பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சிஎஸ்ஐ தூத்துக்குடி – நாசரேத் திருமண்டலத்திற்கு மில்லர்புரம் சேகரம் தூய பவுலின் ஆலயத்தின் 59-ஆவது பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை விழாவையொட்டி, ஆலயத்தில் ஆராதனை மற்றும் நற்செய்தி பெருவிழா வழிபாடுகள் நடைபெற்றன. இதில் சபை மக்கள் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி கிறிஸ்தவர்கள் திரளாகக் கலந்துகொண்டு ஜெபித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாகப் பொதுமக்களுக்கு வழங்கப்படும் ‘அசன விருந்து’ நடைபெற்றது. இதற்காகப் தூத்துக்குடி நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகை தந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இந்த அசன விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்து, உணவருந்திச் சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மில்லர்புரம் சபை ஊழியர்கள், கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சபை மக்கள் இணைந்து செய்திருந்தனர்.


