பதிவிக்காக திமுகவிடம் மண்டியிட தயங்க மாட்டார் இ.பி.எஸ் என செய்துங்கநல்லூரில் டிடிவி தினகரன் பேசினார்.
செய்துங்கநல்லூரில் ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி அ.ம.ம.க வேட்பாளர் சுந்தரராஜனை ஆதரித்து டி.டி.வி தினகரன் பேசினார். அவர் பேசும் போது கூறியதாவது. எப்போதுமே இடைத்தேர்தல் வரவேண்டும் என்றால் அந்த தொகுதி எம்.எல்.ஏ மரணித்திருக்கவேண்டும். தற்போது திருப்பரங்குன்றத்தில் தேர்தல் வருவது போல் வந்திருக்கும். ஆனால் ஒட்டபிடாரம் எம்.எல்.ஏ சுந்தரராஜன் திடாகாத்திரமாக இருக்கும் போதே அவரை பதவி நீக்கம்செய்து தற்போது தேர்தல் வந்திருக்கிறது. நமது சின்னம்மா கூறியதாதல் எடப்பாடி முதல்வராக வாக்களித்தவர் சுந்தர்ராஜ். தற்போது பதவியை இழந்து உங்கள் முன்னால் நிற்கிறார். எடப்பாடி முதல்வர் ஆக வேண்டும் என்பதற்காக சின்னம்மா முன்பு நாலு கால் மண்டியிட்டவர். நன்றி மறந்தவர். இந்த நன்றிமறந்தவரோடு தற்போது நமது தென் மாவட்டத்தினை சேர்ந்த எட்டப்பன் பன்னீர்செல்வமும் கைகோர்ந்து நிற்கிறார். இரட்டை இலை சின்னம் இருந்தால் ஜெயித்துவிடலாம் என நினைக்கிறார்கள். அந்த சின்னம் புரட்சி தலைவர் கையில் இருந்தபோதும், அம்மா கையில் இருந்த போதும் நிச்சயம் வெற்றி தான். ஆனால் துரோகிகள் கையில் இருக்கும் போது எப்படி வெற்றி கிடைக்கும். அம்மாவின் விசுவாசிகள் ஒரு நாளும் இவர்களிடம் மயங்க மாட்டார்கள். ஆர்.கே தொகுதியில் இரட்டை இலை வைத்திருந்த அவர்களை சுயேட்சையாக நின்ற நான் தோற்கடித்தேன். அதே நிலை தான் தற்போதும் ஏற்படும். அம்மா படத்தினை சட்டமன்றத்தில் வைக்க கூடாது என்ற தேமுதிக, அம்மா விக்கு நினைவு மண்டபம் கட்ட கூடாது என்று கூறிய பா.ம.க, கடைசிவரை அம்மா பார்க்க வராத மோடியின் பா.ஜா.க இவர்களோடு கூட்டணி வைத்துக் கொண்டு ஆட்சியை காப்பாற்ற திட்டமிடுகிறார் எடப்பாடி என்ற எடுபுடி. இவர் மோடியின் எடு பிடி. மோடியா இந்த லேடியா என அம்மா எதிர்த்து நின்று ஜெயித்தார்கள். இன்று மோடி எங்கள் டாடி என அவர்களிடம் சராண கதி அடைந்துள்ளார்கள். அது மட்டுமல்லாமல் எப்படியாவது ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர்.
இப்போது இடைத்தேர்தலில் தங்களது ஆட்சியை காப்பாற்றி கொள்ள ஓட்டுக்கு 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் வரை கொடுக்க தயாராக உள்ளார்கள். எங்களை அடிக்கடி திமுகவுடன்கூட்டணி வைத்திருக்கிறார்கள் என்று கூறி வருகிறார் எடப்பாடி. நாங்கள் ஏன் அவர்களிடம் கூட்டணி வைக்க வேண்டும். எம்.ஜி.ஆர் திமுகவை எதிர்த்து தான் இந்த இயக்கத்தினை துவங்கினார். கடைசிவரை திமுகவுடன் உடன்பாடு கொண்டதில்லை. அதை தொடர்ந்து அம்மாவும் அதுபோலவே ஆட்சி செய்தார். ஆனால் இன்று ஆட்சியை தக்க வைக்க திமுகவிடம் மண்டியிடவும் எடப்பாடி தயங்க மாட்டார். வருகிற 23 ந்தேதி மோடியை வீட்டுக்கு அனுப்ப நீங்கள் வாக்களித்து விட்டிர்கள். அதுபோலவே நடைபெறும் 3 தொகுதியில் இடைதேர்தலில் அதிமுகவிற்கு வீட்டுக்கு அனுப்ப நீங்கள் வாக்களிக்க வேண்டும். என்று அவர் பேசினார்.
இவர் செய்துங்கநல்லூரில் இருந்து கிளம்பி, வி.கோவில்பத்து, நாட்டார்குளம், விட்டிலாபுரம் வள்ளூவர்காலனி, அனவரதநல்லூர், வசவப்பபுரம் அம்பேத்கார் நகர், வசவப்பபுரம், முறப்பநாடு , வல்லநாடு உள்பட பல பகுதியில் பிசரச்சாரம் செய்தார். அவருடன் வேட்பாளர் சுந்தர்ராஜ், மண்டல் பொறுப்பாளர் மாணிக்கராஜா, மாநில அம்மா பேரரவை செயலாளர் மாரியப்பன் கென்னடி, மாவட்ட அம்மா பேரவை செயலாளர் புவனேஷ்வரன், எம்.ஜி.ஆர் மன்ற மாநில செயலாளர் காசியானந்தம், மாவட்ட வழங்கறிஞர் பிரிவு சங்கரலிங்கம் , மாநில எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் லெனின், கருங்குளம் ஒன்றிய செயலாளர் சிவசுப்பிரமணியன், பொதுக்குழு உறுப்பினர் கொம்பையா, மாவட்ட சிறுபான்மை பிரிவுசெயலாளர் ஓபி முஸ்தபா, தகவல் தொழில் நுட்ப பிரிவு முருகன், ராஜ் பாண்டியன், கார்த்திக், பொந்தன்பொழி மாயாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


