வணிக தினத்தினை முன்னிட்டு செய்துங்கநல்லூரில் நேற்று கடையடைப்பு நடந்தது.
செய்துங்கநல்லூரில் மெயின் பஜார், கீழப்பஜார் , வசவப்புரம் ரோடு என பஜார்கள் உள்ளன. இங்கு சுமார் 200க்கு மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் வணிக தினத்தினை முன்னிட்டு முழுவதுமாக அடைக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தொழில் வர்த்தக சங்கத்தினர் செய்திருந்தனர்.
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.


